Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு

திணைக்களத்தின் பின்னணி

இலங்கை தொடர்பில் நோக்கும் போது அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் மற்றும் நிருவாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடமிருந்து கீழ் நோக்கிய மட்டங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடம் கையளிப்பதையே குறிக்கின்றது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டபூர்வ ஆவணங்களாக அமைவன,

  1. அரசியல் அமைப்பிற்கான பதின்மூன்றாவது திருத்தம்
  2. 1987 இன் 42 ஆம் இலக்கமுடைய மாகாண சபைகள் சட்டம்
     

அதற்கிணங்க, 1987 நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தினால் இலங்கையின் 1978 இன் அரசியலமைப்பின் 13 வது திருத்தமும் 1987 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமும் அங்கீகரிக்கப்பட்டது. 1988 பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிய ஒழுங்குவிதியின் பிரகாரம் ஒன்பது மாகாண சபைகள் நிறுவப்பட்டன முதலாவது மாகாண சபைத் தேர்தல் 1988 ஏப்றல் மாதம் 28 ஆம் திகதி வடமத்திய, வடமேல், சபரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நடத்தப்பட்டது. மத்திய, தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான மாகாண சபைத் தேர்தல் 1988 யூன் மாதம் 02 ஆம் திகதி நடைபெற்றது. ஆளுநர்களின் மேற்பார்வையின் கீழ் பேணிவருவதற்காகவே மாகாண சபைகள் நிறுவப்பட்டன.


அன்று முதல் நாங்கள் எமது பயணத்தைத் தொடங்கியதோடு, பல தேர்தல்களை நடாத்தினோம். முதலமைச்சர்கள் மாகாணசபை நிதியங்களை முகாமைத்துவம் செய்யவும் நிருவகிக்கவும் ஒத்துழைப்பு நல்கி மாகாண சபைகளின் திறைசேரியாக செயலாற்றினர். நாங்கள் இத்தருணமாகும் போது அரச துறையில் நிதி முகாமைத்துவம் பற்றிய 20 வருடகால உன்னத நிலையை அடைந்துள்ளோம்.


இது சம்பந்தமாக ஊவா மாகாண சபை நிறுவப்பட்டதோடு நிதி முகாமைத்துவ திணைக்களம் மாகாண சபை திறைசேரியாக கருதப்படுகின்றது. தொடக்கத்தில் நிதி முகாமைத்துவ திணைக்களம் பிரதம செயலாளர் அலவலகத்தின் ஒரு பிரிவாகப் பேணப்பட்டு வந்ததோடு, 2002 ஆம் ஆண்டில் தலைப்பு இலக்கமொன்றுடன் தனிவேறான திணைக்களமாக மாறியது.

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4

The Government Information centerr